search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
    X

    பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்

    • சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது.
    • பயிர் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசு நீட்டிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டருக்கு, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் மின்னஞ்சல் மூலம் இன்று காலை அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர், திருவாரூர் , நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா பகுதிகளில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட குறுவைப் பயிர் போதிய தண்ணீர் வரத்தின்றி பெரும்பாலான ஏக்கர் பயிர்கள் கருகி வீணாகி விட்டன.

    இந்நிலையில் சம்பா பருவத்திற்காக போதிய தண்ணீர் கிடைக்காததால், சம்பா பருவ சாகுபடி தாமதமாக செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 வரை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது.

    பயிர் காப்பீடு செய்வதற்கான சிட்டா அடங்கல் பெறுவதற்கு விவசாயிகள் நிர்வாக காரணங்களினால் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

    தற்போது மழை பெய்து வருவதாலும், காவேரி தண்ணீர் ஓரளவு வருவதை நம்பியும் விவசாயிகள் சம்பா சாகுபடியில் இறங்கி உள்ள நிலையில் காப்பீடு செய்வ தற்கான காலக்கெடுவை தமிழ்நாடு அரசும், தஞ்சை மாவட்டம் நிர்வாகமும் பரிசீலித்து மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×