என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
4, 5-ம் வகுப்புகளுக்கு தொகுத்தறிதல் தேர்வு இன்று தொடங்கியது
- 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது.
- 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
சேலம்:
அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்டவற்றில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.
இதன்படி அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டில் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில், தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்த உள்ளது. மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப் படையில் பொதுத் தேர்வுக்கு இணை யாக நடத்தப்படுகிறது.
இன்று முதல் 3 நாட்க ளுக்கு நடத்தப்பட உள்ள தேர்வு கண்காணிப்பு பணிக்கு ஆசிரியர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று காலையில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் தேர்வு தொடங்கியது. குறிப்பாக 1000-க்கும் மேற்பட்ட தொடக்க, நடு நிலைப்பள்ளிகளில் 4, 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்த பின், அதன் மதிப்பீடுகள், கல்வி அமைச்சகத்துக்கு தொகுப்பு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.