search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகே பயணியர் நிழற்குடை அகற்றியதால் பொது மக்கள் கடும் அவதி
    X

    கடலூர் அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிழற்குடை இல்லாததால் பயணிகள் ரோட்டில் பஸ்சுக்காக காத்திருப்பதை படத்தில் காணலாம்

    கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகே பயணியர் நிழற்குடை அகற்றியதால் பொது மக்கள் கடும் அவதி

    • சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர்.
    • ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை.

    கடலூர்:

    கடலூர் அரசு மருத்துவமனை அருகே கடந்த பல ஆண்டுகளாக பயணியர் நிழற்குடை இருந்து வந்தது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக வளாகத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக இங்கு அமைக்கப்பட்டு இருந்த பயணியர் நிழற்குடையை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் மற்றும் நோயாளிகள் வெயில் , மழைக்காலங்களில் பாதுகாப்பாக அமர்ந்திருந்தனர். மேலும் சாலையில் பொதுமக்கள் நிற்காமல் இருந்ததால், இந்த பகுதியில் பாதிப்பும் ஏற்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சாலை ஓரத்தில் கழிவு நீர் கால்வாய் அமைப்பதற்காக பயணியர் நிழற்குடை அகற்றப்பட்டது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையில் நின்று தினந்தோறும் பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

    மேலும் மழை மற்றும் சுட்டெரிக்கும் வெயிலில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கால்கடக்க நீண்ட நேரம் நின்று பஸ்ஸில் பயணம் செய்து வருகின்றனர். மேலும் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வெயில் மற்றும் மழையில் நிற்பதால் மீண்டும் மீண்டும் உடல் உபாதைகள் ஏற்பட்டு மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் ஏற்கனவே அமைத்திருந்த நிழற்குடையை எந்தவித காரணமும் இன்றி அகற்றியதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதோடு அதிகாரிகளின் அலட்சியத்தின் உச்சமாக இதனை பார்க்க நேரிடுகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆண்டாண்டு காலமாக அமைக்கப்பட்டிருந்த பயணியர் நிழற்குடை மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×