search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் பகுதிகளில் நிலக்கடலை எடுக்கும் பணிகள் தீவிரம்
    X

    அரியப்பபுரம் வயல்வெளியில் நிலக்கடலை எடுக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம்.

    பாவூர்சத்திரம் பகுதிகளில் நிலக்கடலை எடுக்கும் பணிகள் தீவிரம்

    • கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரை விற்பனையானது.
    • நிலக்கடலைகளை தார்பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி, ஆவுடை யானூர், சிவசை லனூர், அரியப்பபுரம், திரவிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் விவசா யிகள் அதிக அளவில் நிலக்கட லை பயிரிட்டு இருந்தனர்.

    நிலக்கடலை விளைச்சல் அடைந்துள்ளதால் அதனை எடுக்கும் பணியில் தீவிர மாக விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு தென்காசி மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யாததால் கடலை விளைச்சல் குறைந்துள்ளதாகவும், வெள்ளை குட்டம் எனும் நோயும் தாக்கி உள்ளதால் நிலக்கடலை பருப்புகள் முழுமையான வளர்ச்சியை அடைய வில்லை. மேலும் கடந்த ஆண்டு ஒரு மூட்டை நிலக்கடலை ரூ.3 ஆயிரம் வரையில் விற்பனையான நிலையில் இந்த ஆண்டு ரூ.2 ஆயிரத்து 600 முதல் 2 ஆயிரத்து 800 வரையே விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    வயலில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கடலைகளை வெயிலில் காய வைப்பதற்காக வயலுக்குள்ளேயே தார் பாய்களில் கொட்டி காய வைத்து வருகின்றனர். நிலக்கடலை அறுவடை செய்யப்பட்ட செடிகளை கட்டுகளாக கட்டி மாடுகளுக்கு தீவனமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

    Next Story
    ×