என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் 3-வது நாளாக மகா தீபம் ஏற்றப்பட்டது
- கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
- இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.
திருச்செங்கோடு:
கொங்கு 7 சிவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமாக போற்றப்படும் திருச்செங்கோடு மலை மீது அர்த்த நாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த மலைக்கோவிலிலிருந்து கிழக்கு புறமாக மலை உச்சிக்கு கரடு முரடான மலைப்பாதை இருக்கிறது. மலை உச்சியில் பங்கஜவல்லி சமேத பாண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இதை உச்சிப்பிள்ளையார் கோவில் என்று கூறுவர்.
இந்த உச்சி பிள்ளையார் கோவில் எதிரே உள்ள செங்குத்தான பாதையில் கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை தீப விழா அறக்கட்டளை சார்பில் மகாதீபம் ஏற்றப்பட்டது . 600 லிட்டர் நெய் பத்து மூட்டை பருத்தி நூல் கற்பூரம் பயன்படுத்தி மயில் முருகேஷ் சுவாமிகள் திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் அறிவாதீனம் சுவாமிகள் சிவகைலாயம் சதானந்த சுவாமிகள் ஆகியோர் மகா தீபம் ஏற்றி வைத்தனர்.
நேற்று மூன்றாவது நாளாக பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் தீப விழா குழுவினர் மலை உச்சிக்கு சென்று திரிகளை மாற்றி விட்டு மகா தீபம் ஏற்றி வைத்தனர். தலைவர் குமரவேலு பொருளாளர் மனோகரன் துணை செயலாளர் பார்த்திபன் துணை தலைவர் வஜ்ரவேல் செயற்குழு உறுப்பினர்கள் மேஷன் மதன்குமார் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த தீபம் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பிரகாசமாக தெரிந்தது. தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தீப விழா குழுவினர் மலைக்குச் சென்று திரிகளை மாற்றி தீபம் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து 5 நாட்களுக்கு இந்த தீபம் எரியும். மார்கழி திருவாதிரை தினத்தில் தீபக் கொப்பறையில் எஞ்சி உள்ள நெய் குழம்பு மை சிவகாமி அம்பாள் நடராஜர் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் திருநாவுக்கரசு கூறினார் .