search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி  மாநகராட்சி கட்டுமான பணிகளை இரவில் ஆய்வு செய்த மேயர்
    X

    மழைநீர் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்த காட்சி.

    தூத்துக்குடி மாநகராட்சி கட்டுமான பணிகளை இரவில் ஆய்வு செய்த மேயர்

    • பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் மேயர் வலியுறுத்தினார்.
    • மாதாகோவில் திருவிழாவுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து செயல்படுத்துவதற்காக மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

    அவர் இரவு நேரத்திலும் மாநகர பகுதிகளில் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து களநிலவரங்களை பார்வையிட்டு வருகிறார்.

    நேற்று இரவு தூத்துக்குடி விக்டோரியா சாலை பகுதியில் வடிகால் மற்றும் சாலை பணிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.

    பணிகள் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் நடைபெற்று வருவதை தொடர்ந்து அங்கு உள்ள கனரா வங்கி அருகே செல்லும் குடிநீர் குழாய் தடத்தையும், வி.இ.ரோடு, ஜின்பாக்ட்ரி ரோடு, ஆவுடையார்ரோடு, பாலவிநாயகர் ரோடு பகுதியில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.மாதாகோவில் திருவிழாவுக்கு முன்பு அப்பகுதியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    தூத்துக்குடி சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சுற்றுப்பயணத்தின்போது உத்தரவிட்டிருந்தார்.

    அதற்கேற்ப மழைநீர் வடிகால் அமைக்கும் அனைத்து பணிகளையும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறார்.

    Next Story
    ×