search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திரப்பாடி ஊராட்சியில் குளம் வெட்டும் பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்
    X

    குளம் வெட்டும் பணியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.

    சந்திரப்பாடி ஊராட்சியில் குளம் வெட்டும் பணி- அமைச்சர் தொடங்கி வைத்தார்

    • 500 கி.மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.
    • பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    தரங்கம்பாடி:

    செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், சந்திரப்பாடி ஊராட்சியில் தொண்டு நிறுவனம் சார்பில் கடல்நீர் உட்புகுதலை தடுத்து நிலத்தடி நீரினை நன்னீராக மாற்றம் செய்திடும் முயற்சியாக குளம் வெட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை வகித்தார்.

    ராமலிங்கம் எம்.பி., நிவேதா முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா ராஜ்குமார் வரவேற்றார்.

    இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு குளம் வெட்டும் பணியை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் முகஸ்டா லின், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடல்நீர் உள்ளே புகாத வகையில் கடல் முகதுவாரத்தில் தடுப்பணைகள் கட்டி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்தியாவில் இருக்கின்ற பல மாநிலங்களில் அதிகமான நீளமான கடற்கரையை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

    அந்த வகையில் தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்கள் உள்ளன.

    இந்த கடற்கரையோர மாவட்டங்களை பாதுகா ப்பதற்காக கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டருக்கு நீர்நிலைகளில் பல்வேறு நாட்டு மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

    நீர் நிலைகளையும், நீராதாரங்களையும் பாதுகாக்க அரசு, அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    இந்த ஊராட்சியில் விரைவில் கருவேல மரங்களை அகற்றிவிட்டு புங்க மரங்களை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்போது இங்கு பணி செய்ய உள்ள தொண்டு நிறுவனம் நீர் நிலைகளை காப்பாற்றும் வகையில் பல்வேறு இடங்களில் குளங்களை வெட்டி உள்ளன.

    எனது சொந்த ஊரிலேயும் இந்த தொண்டு நிறுவனம் குளங்களை வெட்டி வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் நீர் நிலைகளை பாதுகாக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் மீனா, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தொண்டு நிறுவன நிர்வாகி நமல்ராகவன், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணா சங்கரி, தாசில்தார் காந்திமதி, ஒன்றிய கவுன்சிலர் செல்வம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×