search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீட்டு தின்னையில் அமர்ந்து குடிநீர் தட்டுப்பாடு குறித்து கேட்டறிந்த எம்.எல்.ஏ
    X

    வீட்டு தின்னையில் அமர்ந்து கிராமமக்களிடம் அன்பழகன் எம்.எல்.ஏ குறைகளை கேட்டறிந்தார்.

    வீட்டு தின்னையில் அமர்ந்து குடிநீர் தட்டுப்பாடு குறித்து கேட்டறிந்த எம்.எல்.ஏ

    • குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருப்புறம்பியம் ஊராட்சி உத்திரை கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ., கிராமத்திற்கு நேரில் சென்று ஒரு வீட்டின் தின்னையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், உத்திரை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2 புதிய வகுப்பறை கட்டிட பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிதாக சமையல் கூடம் கட்டும் பணிகள் மற்றும் 14-வது நிதிக்குழு மானியத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் பராமரிப்பு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது, கும்பகோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுதாகர், வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி, ஊராட்சி தலைவர் வைஜெயந்தி சிலம்பரசன், தி.மு.க. பகுதி செயலாளர் கோவிந்தராஜன், நிர்வாகி முத்துசாமி மற்றும் பலர் உள்ளனர்.

    Next Story
    ×