என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆழியாறு அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
- அணையை சுற்றி பார்க்க குடை பிடித்து செல்ல வேண்டி உள்ளது
- கூட்டம் இல்லாததால் படகு சவாரியும் ரத்து
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு பகுதியில் பெரிய அணைக்கட்டு உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எழில்மிகு பூங்கா மற்றும் படகு சவாரி ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
எனவே கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் ஆழியாறு அணைக் கட்டுக்கு வந்திருந்து, அங்கு உள்ள பூங்காவில் பொழுதுபோக்குவதுடன், அணைக்கட்டு பகுதியில் படகு சவாரி சென்றும் மகிழ்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை காலங்களில் ஆழியாறு அணையில் சுற்றுலா பபணிகள் கூட்டம் அலை மோதும்.
பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அங்கு உள்ள பல்வேறு பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. எனவே ஆழியாறு அணையை சுற்றி பார்க்க வரும் பயணிகள் குடை பிடித்துக்கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது.
ஆழியாறு பகுதியில் வெயில் கொளுத்துவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் அணைக் கட்டுக்கு தினமும் வந்து செல்வோரின் எண்ணிக்கை சுமார் 2 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது.
ஆனால் தற்போது நாள்தோறும் 300-க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். எனவே ஆழியாறு அணைக் கட்டு பகுதியில் உள்ள பூங்கா வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் சுற்றுலா பயணி களின் வரத்து குறைவு காரணமாக அணைக்கட்டு பகுதியில் படகு சவாரியும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் சற்று ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் வெயிலின் தாக்கம் அதிக மாக உள்ளது.
எனவே சுற்றுலா பபணிகளின் வருகை குறைந்து உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் மழை பெய்து மீண்டும் குளுமை திரும்பினால் ஆழியாறு அணைக்கு வரும் சுற்றுலா பபணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.