search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம்
    X

    கட்சியின் அலுவலக நுழைவுவாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகம்

    • பட்டுக்கோட்டையில் நகராட்சி அலுவலகம் அருகே விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
    • இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டையில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அலுவலகம் அமைத்து உள்ளதாகவும், உடனடியாக கோவில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினரான பக்கிரிசாமியின் பெயரில் கட்சியின் அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    பட்டுக்கோட்டையில் நகராட்சி அலுவலகம் அருகே விஸ்வநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான காசாங்குளம் கீழ்கரையில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான புல எண் 20/ஏ1, குடியிருப்பு மனை பிரிவின்கீழ் வரும் இடத்தில் 4 ஆயிரத்து 420 சதுர அடி இடத்தினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக ஆக்கிரமிப்பு செய்துள்ள பக்கிரிசாமி என்பவரை சட்டப்பிரிவு 78-ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அந்த இடத்திலிருந்து வெளியேற்றம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை மாவட்ட இணை ஆணையர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதன் நகல் அலுவலக வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.

    அதன் விபரம் வருமாறு: ஆக்கிரமிப்பு அகற்றுதல் இந்து சமயஅறநிலையச் சட்டம் 1959 - சட்டப்பிரிவு 78,79.68ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி அந்த இடத்தை கோவில் நிர்வாகத்தின் சுய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடர்பாகவும். நோட்டீஸில் அறிவித்துள்ளபடி கோவிலுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ள பக்கிரிசாமி என்பவர் 23.8.22அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ காலி செய்து கோவில் செயல் அலுவலர் வசம் இடத்தினை ஒப்படைக்க வேண்டுமென சட்டப்பிரிவு 78 (4) -ன் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

    தவறினால் 24.8.22 அன்று காவல்துறை ஒத்து ழைப்புடன் சட்டப்பி ரிவு 79 (1) -ன் கீழ் வெளியேற்றம் செய்து கோவில் சுவாதீனத்திற்கு கொண்டுவர நேரிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×