search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றில் தத்தளித்தவரை காப்பாற்ற முயன்றவர் தண்ணீரில் மூழ்கி சாவு
    X

    ஆற்றில் தத்தளித்தவரை காப்பாற்ற முயன்றவர் தண்ணீரில் மூழ்கி சாவு

    • வேலுச்சாமியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    • காப்பாற்ற முயன்ற செந்தில் தண்ணீரில் மூழ்கினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சாத்தனூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் (வயது 50 ) விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி ( 45). இவர் நேற்று மாலை சாத்தனூரில் உள்ள காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார் . அப்போது திடீரென நீரின் வேகம் அதிகரித்ததால் வேலுச்சாமி அடித்துச் செல்லப்பட்டார். சிறிது தூரத்தில் தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றுங்கள் .. காப்பாற்றுங்கள் ... என கூக்குரலிட்டார்.

    அப்போது கரையில் நின்று கொண்டிருந்த செந்தில் உள்பட பொதுமக்கள் சிலர் ஆற்றில் குதித்து வேலுச்சாமியை காப்பாற்ற முயன்றனர். இதில் வேலுச்சாமியை பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரைக் காப்பாற்ற முயன்ற செந்தில் தண்ணீரில் மூழ்கினார்.

    இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் மருவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் குதித்து செந்திலை தேடி வந்தனர் . இரவு வெகுநேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை சாத்தனார் பகுதி பொதுமக்கள் ஆற்றில் தண்ணீர் அளவை குறைத்தால் தான் செந்திலை மீட்க முடியும் என கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஆற்றில் தண்ணீர் அளவை குறைத்தனர் .

    இந்த சூழ்நிலையில்

    திருவையாறு அருகே வடுகக்குடி பகுதியில் செந்தில் உடல் பிணமாக கரை ஒதுங்கியது.

    இதைத்தொடர்ந்து மருவூர் போலீசார் செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்றில் தத்தளித்தவரை காப்பாற்ற சென்ற விவசாயி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×