என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.25 லட்சம் மதிப்பிலான 64 செண்ட் நிலத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
- சங்கரவேலு நிலத்தை, மற்றொரு சங்கரவேலு வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார்.
- மீட்கப்பட்ட நிலம் போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் சங்கரவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தென்காசி:
சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் சங்கரவேலு (வயது81). இவருக்கு சொந்தமான ரூ. 25 லட்சம் மதிப்பிலான 64.5 செண்ட் நிலத்தை, அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சங்கரவேலு என்பவர் பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி மோசடி செய்து மற்றொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சங்கரவேலு கடந்த 2-ந்தேதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் டி.எஸ்.பி. முத்துப்பாண்டி அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் உமா மகேஸ்வரி, மாரியப்பன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலி ஆவணம் ரத்து செய்து, மீட்கப்பட்ட நிலத்தை போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் முன்னிலையில் சங்கரவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீசாருக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பாராட்டுகளை தெரிவித்தார்.