search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு இன்று இரவு நடக்கிறது
    X

    அம்மனை தரிசிப்பதற்காக வரிசையில் நின்ற பக்தர்கள்.  

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சக்தி அழைப்பு இன்று இரவு நடக்கிறது

    • சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
    • தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    சேலம்:

    சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 26ந் தேதி பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.

    இதனால் சேலம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.




    விடுமுறை நாளான நேற்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்கள் தங்களது வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த ராகி கூழ், கம்மங்கூழ், மோர், சர்க்கரை பொங்கல், தயிர்சாதம், லெமன் சாதம், புளி சாதம் உள்ளிட்டவைகளை பொதுமக்களுக்கு அன்னதானமாக வழங்கினர்.

    ஆடித் திருவிழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 11, 12ந் தேதி ஆகிய 3 நாட்களில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இதனால் கோவிலுக்கு விடிய, விடிய அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொங்கல் வைக்கும் இடமான கோவில் பின்புறம் பக்தர்களின் வசதிக்காக தண்ணீர், அடுப்பு போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வருகிற 16ந் தேதி காலை 10.30 மணிக்கு பால்குட விழாவும், தொடர்ந்து உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனையும் நடக்கிறது.

    Next Story
    ×