search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுரண்டை நகராட்சியை சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்-மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சேர்மன் பேச்சு
    X

    சுரண்டை நகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாமை சேர்மன் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சியை சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்-மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சேர்மன் பேச்சு

    • குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்குவதால் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.
    • காய்ச்சல் இருந்தால் ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.


    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நகராட்சி அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொறியாளர் முகைதீன் தலைமை தாங்கினார்.

    கவுன்சிலர் வைகை கணேசன்,வேல் முத்து, நகராட்சி மேலாளர் வெங்கட சுப்பிர மணியன், தலைமை கணக்காளர் முருகன், வருவாய் ஆய்வாளர் வினோத்குமார்,சுகாதார ஆய்வாளர் பாலசுப்ர மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவ முகாமை தொடங்கி வைத்து சுரண்டை நகராட்சி சேர்மன் பேசியதாவது:-

    தற்போது மழைக்காலம் தொடங்கியதால் தனது வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பொது மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு குடிநீரை காய்ச்சி வழங்க வேண்டும்.அவ்வாறு வழங்குவதால் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.தங்கள் வீட்டில் உள்ள சின்டெக்ஸ், தண்ணீர் தொட்டி,பிரிட்ஜ் போன்றவற்றை ஆய்வு செய்ய வரும் நகராட்சி பணியாளர்களுக்கு வீட்டில் உள்ளவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.நிலவேம்பு கசாயத்தை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் இருந்தால் ஆரம்பத்திலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினர்.

    தொடர்ந்து சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அருள்ஜோதி நகராட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டார்.முடிவில் நகராட்சி பணியாளர் சங்கீதா நன்றி கூறினார்.

    Next Story
    ×