என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் 20 நாட்களாக வடியாத அவலம்
- சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
- இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக மழை இல்லாததால் ஒரு சில இடங்களில் தண்ணீர் வடிந்து வருகிறது.
இந்த நிலையில் பி. நல்லாகவுண்டம்பட்டி ஊராட்சியில் உள்ள பழைய காலனி பகுதியில் கடந்த 20 நாட்களாக குடியிருப்புகளில் ஊற்றெடுத்து தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் இங்கிருந்து தண்ணீர் செல்லும் வாய்க்கால்களை அருகே உள்ளவர்கள் அடைத்து உள்ளதால் தண்ணீர் வெளியேற வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.
எனவே உடனடியாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடியிருப்பு சுற்றியுள்ள பகுதியில் உள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.