search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது
    X

    விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது

    • நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது.
    • திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.

    விழுப்புரம்:

    ஆடி மாத காற்றில் அம்மியும் நகரும் என்ற வழக்கு மொழி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆடிமாதம் பிறந்தது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது. சித்திரை மாத கத்திரி வெயிலை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் விழுப்புரம், கோலியனூர், பெரும்பாக்கம், சாலை அகரம் மற்றும் செஞ்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வரும் 10-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். 110 டிகிரி வரையில் வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை விழுப்புரம் நகர சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த அளவிலேேய காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து 11 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. விடியற்காலை 3 மணி வரை மழை நீடித்தது. இதனால் விழுப்புரம் நகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வெப்பசலனத்தால் பெய்த இந்த திடீர் மழையால் விழுப்புரம் நகரப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல இரவு நேரங்களில் ஒரிரு நாட்கள் மழை பெய்தால் வெயிலின் தாக்கம் குறைந்து விடும். அதேசமயம் இந்த திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.

    Next Story
    ×