search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்
    X

    சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை படத்தில் காணலாம்.

    நெல்லிக்குப்பத்தில் சாலை விரிவாக்க பணி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

    • சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர்.
    • நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. நெல்லிக்குப்பம் பகுதியில் நடக்கும் சாலைப் பணிகளில் சரியான முறையில் அளவீடு செய்யவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று காலை சாலை மறியல் நடைபெற்றது.

    மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திரண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். ்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×