search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும்
    X

    சாலையில் குவிந்துள்ள மணலில் சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவிகள்.

    சாலையில் குவிந்துள்ள மணலை அப்புறப்படுத்த வேண்டும்

    • வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
    • விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் 3 அரசு வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், திருமண மண்டபங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துன்ன.

    விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

    கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் தற்போது சாலையில் மணல் தேங்கி நிற்பதால் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.

    வாகனங்கள் சேதமடைந்து விடுகிறது.

    விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறும்பேது, இவ்வழியே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது மணல் சறுக்கி விழுந்து விடுகின்றனர்.

    இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் போது மணலில் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்.

    காயங்கள் ஏற்படுகிறது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணலை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×