என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது](https://media.maalaimalar.com/h-upload/2022/12/21/1810185-13.webp)
X
வீட்டில் புகுந்த பாம்பு பிடிபட்டது
By
மாலை மலர்21 Dec 2022 3:38 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
- மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பு பிடிபட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திட்டை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மகாலெட்சுமி. இவரது வீட்டின் மேல் சிமெண்ட் சீட்டால் கூரை அமைத்துள்ளார்.
அதன் மேல் வெய்யிலின் தாக்கத்தை குறைப்பதற்காக தென்னை மட்டைகளை பரப்பியுள்ளார். இந்நிலையில் அருகில் உள்ள வயல்பகுதியில் இருந்து வந்த பாம்பு ஒன்று வீட்டின் கூரை மேல்பகுதியில் புகுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மகாலெட்சுமி வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் பாம்பு பிடி வீரரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த பாம்பு பாண்டியன் கூரை மேல் ஏறி அங்கு மறைந்திருந்த 8 அடி நீளமுள்ள கருஞ்சாரை பாம்பை லாவகமாக பிடித்தார்.
Next Story
×
X