என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவலாளி வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
- அசோக்குமார் (வயது 46). இவர் காந்தி ஸ்டேடியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
- வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் கிச்சிப்பாளையம் காந்தி மகான் தெரு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 46). இவர் காந்தி ஸ்டேடியத்தில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இது குறித்து அசோக்குமார் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






