என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோவில்பட்டியில் கோலப்போட்டியில் அசத்திய பெண்கள்
- மகளிர் தின விழா கோலப்போட்டி கோவில்பட்டி ராஜீவ் நகரில் நடைபெற்றது.
- சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் கரிசல் இலக்கியம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் மகளிர் தின விழா கோலப்போட்டி நடை பெற்றது.
கோவில்பட்டி ராஜீவ் நகரில் உள்ள கவுணியன் பதின்ம பள்ளியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பெண்மையை போற்றும் வகையிலும், பெண் உரிமை, பெண்கள் சுதந்திரம், தாய்மை என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கோலங்கள் இட்டு அசத்தினர்.
இதையடுத்து சிறந்ததாக 2 கோலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழக்கப்பட்டன. பரிசளிப்பு விழாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நகர தலைவர் கே.பி.ராஜகோபால் தலைமை தாங்கினார். ஆசிரியை அமல புஷ்பம் வரவேற்றார். சத்தியபாலன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் லதா வெங்கடேஷ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்ற செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் விழா ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.