search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்
    X

    சேலம் ஓமலூர் சர்க்கரை செட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் மின் இணைப்பு வழங்காததை கண்டித்து கண்களை கட்டிக்கொண்டு நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

    கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்

    • சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
    • கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை.

    சேலம்:கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்கண்ணில் கருப்பு துணி கட்டி கலெக்டர் அலுவலகம் வந்த தொழிலாளிகள்

    சேலம் மாவட்டம் ஓமலூர் சக்கரசெட்டிபட்டி பகுதியை சேர்ந்த பெரியண்ணன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர், கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து ஒருவரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர்.

    இதையடுத்து மனு அளித்துவிட்டு வந்து நிருபர்களிடம் பெரியஅண்ணன் கூறும்போது, எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்தேன். தற்போது விவசாயம் நலிவடைந்து விட்டதால் விசைத்தறி தொழில் செய்வதற்காக எந்திரத்திற்கு ரூ.10 லட்சம் வங்கியில் கடனை பெற்றேன்.

    இதனையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு மின் இணைப்பு கேட்டு 17 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளேன். ஆனால் இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. இது குறித்து மின்சாரத்துறை அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தேன்.

    பின்னர் மின்சாரத்துறை சார்பில் மின் இணைப்பு வழங்குவதற்காக அதிகாரி மற்றும் ஊழியர்கள் வருகை புரிந்தனர். அப்போது அருகில் இருந்த வசதி படைத்த மணி உள்ளிட்டோர் மின் இணைப்பு வழங்க கூடாது என தடுத்துள்ளனர். மேலும் மின்சாரத் துறை ஊழியர்களுகடகு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மின்சார துறை அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காமல் சென்று விட்டனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குழந்தைகள் படிக்கவும் முடியவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வாழ்ந்து வருகிறோம். தற்போது கடன் பெற்ற இடத்தில் ஒரு வருடமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலை உள்ளது.

    எனவே தொழில் தொடங்குவதற்கு மின் இணைப்பு அவசியம் என்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு எங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருட்டில் வாழக்கூடிய நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காகவே கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

    மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் சூழ்நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

    Next Story
    ×