என் மலர்
உள்ளூர் செய்திகள்
தொழிலாளி வீடு தீப்பிடித்து எரிந்த
- சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
- சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.
சுவாமிமலை:
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அடுத்த அணைக்கரை விநாயகன் தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40). விவசாய கூலி தொழிலாளி.
இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் சில நாட்களுக்கு முன்பு கஞ்சங்கொள்ளையில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், திடீரென இன்று காலை அவரது வீடு மளமளவென தீப்பிடித்து எரிந்தது.
இதனை கண்ட கிராமமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில் வீட்டில் இருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் மற்றும் தளவாட சாமான்கள் என சுமார் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து சேதமானது.
இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குபதிவு செய்து கூரை வீட்டில் தீ வைத்தது யார்? எப்படி தீ பிடித்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.