search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கயிலாய மலை போல் யாகசாலை அமைப்பு
    X

    கயிலாய மலை போல் காட்சியளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளயாகசாலை.

    சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்தை யொட்டி கயிலாய மலை போல் யாகசாலை அமைப்பு

    • சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
    • கங்கை நீர் வழிந்து ஓடுவது போல் பிரமாண்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கு கோபுரவாயில் நந்தவனத் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட யாகசாலை பந்தலில், 82 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

    சுமார் 120 சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பிரம்மாண்டமான அளவில் யாகசாலைக்கு முகப்பு கோபுரங்களுக்கு இணையாக கயிலாய மலையில் சிவன் பார்வதியுடன் காட்சி அளிக்கும் வண்ணம் ஒருபுறம் கங்கை நீர் வழிந்து ஓடுவது போலவும் பிரம்மாண்டமான முறையில் செட் அமைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டும் இன்றி ஆலயத்தின் அனைத்து பகுதிகளிலும் கோபுரங்கள் சுற்றுச்சுவர்கள் வண்ண மின் விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு நாட்டிய நிகழ்ச்சி ஆகிய வையும் நடைபெறுகிறது.

    இவற்றைக் காண இரவு நேரங்களில் சீர்காழி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    இந்நிலையில்2ம் கால யாகசாலை பூஜையில் தர்மபுரம் ஆதீனம் மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×