என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![சிதம்பரம் அருகே ஆவின் பால் கடையில் திருட்டு சிதம்பரம் அருகே ஆவின் பால் கடையில் திருட்டு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/30/1889754-thirutukumbal.webp)
X
சிதம்பரம் அருகே ஆவின் பால் கடையில் திருட்டு
By
மாலை மலர்30 May 2023 1:15 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிவக்குமார் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார்.
- கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே துணிஞ்சி ரமேடு பெரியார்தெருவைச் சேர்ந்த சிவக்குமார் (50). இவர் நெடுஞ்சேரி புத்தூர் ரோட்டில் ஆவின் பால் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடை ஷெட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியுற்றார். கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் இரும்பு மேஜையின் டிராவை உடைத்து உள்ளே இருந்த ரூ.37,490 ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சிவக்குமார் சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
×
X