search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாய்க்கால் கரையோர தடுப்பு கம்பிகள் திருட்டு
    X

    தடுப்பு கம்பிகள் இன்றி காணப்படும் வாய்க்கால் கரை.

    வாய்க்கால் கரையோர தடுப்பு கம்பிகள் திருட்டு

    • தற்போது தடுப்பு கம்பிகள் மாயமாகி விட்டது.
    • கம்பிகளை திருடியவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு, தமிழ் தேசிய கட்சி தலைவர் தமிழ் நேசன் அனுப்பி உள்ள மனுவில்கூ றியிருப்பதாவது:-

    நீர்வளத்துறை கல்லணை கால்வாய் விரிவாக்கம் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், பட்டுக்கோட்டை வட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்ட எல்லையில் அமைந்துள்ள கல்லணை கால்வாய் பிரதான வாய்க்காலின் நெடுகை மற்றும் அக்கரை வட்டம் பிரதான வாய்க்கால் அலிவலம் வெட்டுவாக்கோட்டை வாய்க்கால்களின் கட்டுமா னங்களை புனரமைக்கும் பணி நடைபெற்றது.

    கல்லணை கால்வாய் வடிநில கோட்டத்தின் ஆற்றுக்கரையில் கீழ்கண்ட கிராமங்கள் உள்ளது.

    ஈச்சங்கோட்டை, வடக்கூர், செல்லம்பட்டி, பொய்யுண்டார் கோட்டை, வீரடிவாரி குலாலர் தெரு, உப்புண்டார்பட்டி, பாச்சூர் உளவயல் வாய்க்கால் சாலை, ஆதனாக்கோட்டை, அய்யம்பட்டி, முதலிப்பட்டி, கருக்காடிப்பட்டி, வெட்டிக்காடு, ஊரணிபுரம், ஆண்டிப்பட்டி, உஞ்சை விடுதி.

    வெட்டுவாக் கோட்டை, சென்னிய விடுதி மற்றும் ராங்கியன் விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள கரையில் இரும்பு தடுப்பு கம்பிகளை காணவில்லை.

    பகல் மற்றும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், மிதிவண்டி, இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கால்நடைகள் மற்றும் புதிதாக பயணிக்கும் பயணிகளை பாதுகாக்கின்ற வகையில் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு.

    ஈச்சங்கோட்டை முதல் சென்னியவிடுதி வரை ஒரத்தநாடு நெடுஞ்சா லைத்துறை உதவி கோட்டம் சார்பாக ஆற்றுகரையில் இரும்பு தடுப்பு கம்பிகள் (பேரிகாட்) அமைக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் தற்போது தடுப்பு கம்பிகள் மாயமாகி விட்டது.

    மேலும் தடுப்பு கம்பிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

    இதனால் ஆற்றில் தவறி விழுந்து பல உயிர்கள் பலியாகி உள்ளன.

    எனவே இதனை தடுக்க ஆற்று கரையில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்.

    கம்பிகளை திருடியவர்களை கண்டுபிடித்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே மனுவானது தஞ்சாவூர் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் , கோட்டப் பொறியாளர் அலுவலக த்திற்கும் அனுப்பி வைத்துள்ளார்.

    Next Story
    ×