search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
    X

    மாயக்கூத்த பெருமாள், அலமேலு மங்கை, குளந்தைவல்லி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளிய காட்சி.

    பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

    • கடந்த மார்ச் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது.
    • மாயக்கூத்த பெருமாள், அலமேலு மங்கை, குளந்தைவல்லி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தோளுக்கினியானில் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தீபாராதனை காட்டப்பட்டது.

    தென்திருப்பேரை:

    தாமிரபரணி ஆற்றின் கரையிலுள்ள நவதிருப்பதி கோவில்களில் 6- வது கோவில் பெருங்குளம் மாயக்கூத்த பெருமாள் கோவில் ஆகும்.

    தெப்பத்திருவிழா

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 18-ந் தேதி கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கியது. 12 ம் நாள் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு தெப்பம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8.15 மணிக்கு திருமஞ்சனம், 9 மணிக்கு நித்தியல். மாலை 5 மணிக்கு சாயரட்சை, 6.30 மணிக்கு சுவாமி மாயக்கூத்த பெருமாள், அலமேலு மங்கை, குளந்தைவல்லி தாயார் களுடன் சிறப்பு அலங்கா ரத்தில் தோளுக்கினியானில் புறப்பட்டு தெப்பத்தில் எழுந்தருளி தீபாராதனை காட்டப்பட்டது.

    நாலாயிர திவ்ய பிரபந்தங் களை அரையர் சம்பத், சாரங்கன் ஸ்வாமிகள், அண்ணாவியார், பாலாஜி ஸ்வாமி ஆத்தான், கீழத்திருமாளிகை சுவாமிகள் ராமானுஜம், உட்பட பலர் சேவித்தனர். பின்னர் தீர்த்தம், சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஸ்தல அர்ச்சகர் வெங்கடேசன், சுந்தரம், பிச்சைமணி, சுந்தர நாராயணன், ஸ்தலத்தார்கள் சீனிவாசன், ராமானுஜம், ஸ்ரீதர், ஸ்ரீகாரியம் அஸ்வின். அரவிந்த், நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் சிவலோநாயகி, கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி, இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை முதன்மை செயல் அலுவலர்கள் கசங்காத்த பெருமாள், புருஷோத்தமன், கள இயக்குனர் விஜயகுமார், சூப்பர் வைசர்கள் வரதராஜ பத்மநாபன், பாலாஜி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று காலை புஷ்ஞ்சாலி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை குளந்தை வல்லி தாயார் கைங்கர்ய சபாவினர் மற்றும் நிர்வாகம் செய்கின்றனர்.

    Next Story
    ×