search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூத்த குடி வாக்காளர்கள் 17,911 பேர் உள்ளனர்:  முதியோர் தினவிழாவில் கலெக்டர் பேச்சு
    X

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மூத்த குடிமக்களை கவுரவப்படுத்தினார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூத்த குடி வாக்காளர்கள் 17,911 பேர் உள்ளனர்: முதியோர் தினவிழாவில் கலெக்டர் பேச்சு

    • 100 வயதுடைய வாக்காளர்களிடம் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது.
    • ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மூத்த குடிமக்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    அக்டோபர் 1-ந்தேதி உலகம் முழுவதும் முதியோர் தினமா ககொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மூத்த குடிமக்களின்பங்களிப்பை அங்கீகரிக்கவும், இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தவும், முதியோர் தின நிகழ்வை கொண்டாட அறிவுறுத்தியது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்டோர் 17,911 வாக்காளர்கள் உள்ளனர். இந்த மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேற்பட்ட) ஜனநாயக செயல்பாட்டில் தங்களது பங்களிப்பை அளிப்பதற்காகவும் நம் நாட்டின் ஜனநாயக செயல்பா டுகளில் இடையராத பங்கேற்பதில் உள்ள ஆர்வத்தின் மூலமாகவும், நாட்டின்இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வதை முன்னிட்டு, மூத்த குடிமக்களை கவுரவிக்கும், விதமாக தலைமை தேர்தல் ஆணையரின் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழி கடிதத்தினை மூத்த வாக்காளர்களுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து இன்று கௌரவப்படுத்தப்பட்டன.

    மேலும் மாவட்டத்திலுள்ள அனைத்து மூத்த குடிமக்கள் கௌரவிக்கும் வகையில்அ ந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்,உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் 80 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 100 வயதுடைய வாக்காளர்களிடம் வீட்டிற்கு சென்று வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் முக்கிய நோக்கமே இளம் வாக்காளர்களை அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கும், ஊக்கப்படுத்தவும், மூத்த குடிமக்களின் தேர்தல் பங்களிப்பினை கவுரவபடுத்திடவும், நம் தேசத்திற்கான ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்காகவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது தேர்தல் தாசில்தார் பாலகுரு, கள்ளக்குறிச்சி தாசில்தார்ச த்தியநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் 4 சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட மூத்த குடிமக்கள் பலரும் உடனிருந்தனர்.

    Next Story
    ×