என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பன்னம்பாறை விலக்கில் வழிகாட்டு பலகையில் கிலோமீட்டர் குறைவாக எழுதப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் குழப்பம்
Byமாலை மலர்6 July 2023 2:22 PM IST
- நெடுஞ்சாலைத்துறை சார்பில் பன்னம்பாறை விலக்கில், நெல்லைக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
- அதில், 55 கிலோமீட்டர் தொலைவு கொண்டதை 40 கிலோமீட்டர் தூரம் உள்ளதாக தவறுதலாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது
சாத்தான்குளம்:
சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் சென்று வருகின்றன. நெடுஞ்சாலைத்துறை சார்பில் பன்னம் பாறை விலக்கில், நெல்லைக்கு செல்ல வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், 55 கிலோமீட்டர் தொலைவு கொண்டதை 40 கிலோமீட்டர் தூரம் உள்ளதாக தவறுதலாக பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியுள்ளது. நெடுஞ்சாலைதுறையினரின் கவனகுறைவான செயலால் வெளியிடங்களில் இருந்து கூகுள் மேப்பை பயன்படுத்தி இங்கு வருபவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும், எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story
×