என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் - முன்னாள் எம்.எல்.ஏ. கோரிக்கை
- தமிழக அரசு புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தது.
- அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும்.
கடையம்:
முதல்-அமைச்சருக்கு, தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
தமிழகத்தில் இருந்து குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. கேரளாவில் நடக்கும் கட்டுமான பணிகள் அனைத்தும் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் கனிம வளங்களை கொண்டே மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம் அந்த மாநிலத்தில் உள்ள கனிம வளங்களை அவர்கள் பயன்படுத்துவ தில்லை.
இந்நிலையில் கனிம வள கொள்ளையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடி வழியாக 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மூலம் கனிம வளங்களை கொண்டு செல்ல தடை விதித்தது. இதன் மூலம் கனிம வள கொள்ளை ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதற்கும் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டி ருக்கிறது.
கேரளாவின் பெரும்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் பெரும்பா லான பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாது காப்பு மண்டலமாக அறிவிக்கப் பட்டது. இதனால் அம்மாநிலத்தில் குவாரி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரளாவை போலவே தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தான் அமைந்துள்ளது. இந்த பகுதிகளை ஏன் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கூடாது? மேலும் கனிம வளங்கள் அதிக அளவில் வெட்டி எடுக்கப்படு வதால் விவசாயமும் அடியோடு அழிவதுடன் அடுத்த தலைமுறைகளுக்கு இந்த கனிம வளங்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.
அடுத்த மாதம் நடக்கும் சட்டமன்ற கூட்டத்தில் கனிம வளங்களை அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தடை விதிக்கும் சிறப்பு தீர்மானம் ஒன்றை தமிழக அரசு கொண்டு வந்து சட்டமாக்க வேண்டும். தென்காசி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களையும் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்