search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
    X

    செல்வ விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை நூதன முறையில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

    • உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
    • கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எம்.ஆர்.கே. நகரில் செல்வவினாயகர் கோவில் உள்ளது. இக்கோ விலுக்கு இன்று காலை 6 மணியளவில் சாமி கும்பிட பக்தர்கள் வந்தனர். கோவில் முடியிருந்ததால் வெளியில் இருந்து சாமி கும்பிட்டனர். அப்போது கோவிலின் மையப்பகுதியில் வைக்கப் பட்டிருந்த உண்டியல், கோவில் உட்பிரகாரத்தின் ஓரமுள்ள கிரில் கேட் அருகில் இருந்தது. அருகில் சென்று பார்த்த பக்தர்கள் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை கண்டு அதிர்ச்சி யடைந்தனர்.

    இது குறித்து விருத்தாசலம் போலீசாருக்கும், ஊர் பிரமுகர்களுக்கும் பக்தர்கள் தகவல் கொடுத்தனர். தக வலின் பேரில் விரைந்து வந்த ஊர் பிரமுகர்கள் கோவில் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கு உடைக்கப்பட்டிருந்த உண்டி யலில் இருந்த ரூபாய் நோட்டு கள் மட்டும் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. சில்ல ரை நாணயங்கள் அங்கேயே கிடந்ததை கண்டனர். கோவிலின் நடுமை யத்தில் இருந்த உண்டியலை, முன்பகுதி வளைக்கப்பட்ட இரும்பு கம்பியால் கிரில் கேட் அருகே இழுத்து. உண்டி யலை உடைத்து பணம் கொள்ளை யடிக்கப்பட்டி ருந்ததை ஊர் பிரமுகர்கள் கண்டுணர்ந்தனர். மேலும், கிரில் கேட் அருகிலேயே உண்டியலை இழுக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடும் கிடந்தது.

    சம்பவ இடத்திற்கு வந்த விருத்தாசலம் போலீசார், இது தொடர்பாக அங்கிருந்த வர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கோவில் உண்டியல் கடந்த 9 மாதத்திற்கு மேலாக திறக்கப் படாததால் சுமார் ரூ.1 லட்சம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் என்று ஊர் பிரமுகர்கள் கூறினார்கள். வரும் 18-ந் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்த காணிக்கை பணத்தை பயன்படுத்த ஊர் பிர முகர்கள் திட்டமிட்டிருந்த தும் போலீசாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப் பட்டது. அங்கிருந்த தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர். சிறிது தூரம் சென்ற மோப்பநாய் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. கோவிலின் உண்டியலை தொடர்ந்து கண்காணித்து வந்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.கே. நகரில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் உள்ள கோவிலில் கொள்ளை நடந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×