என் மலர்
உள்ளூர் செய்திகள்

சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளிய காட்சி.
செங்கோட்டை குலசேகரநாதர் கோவிலில் திருக்கல்யாண விழா
- வசந்த மண்டபத்தில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
- விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜப்பசி மாதம் உத்திர நட்சத்திர தினத்தன்று சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான திருக்கல்யாண விழா கொண்டாடப்பட்டது.
முன்தாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் தனித்தனியாக கோவில் உள்பிரகாரத்திலிருந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பூஜை ஹோமங்களை கோமதி ஸ்டோர் உபயதாரருடன் கணேசபட்டர் குழுவினர் செய்திருந்தனர். திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






