search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி  காசிவிஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்
    X

    காசி விஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.

    தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம்

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரையில் திருவிழா நடைபெறுகிறது.

    வீதி உலா

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி காலையில் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் அம்பாள் தபசு காட்சி எழுந்தருள்கிறார்.

    தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென்காசி ரத வீதியில் காசி விஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×