என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை மற்றும் மின்னணு கடிகாரத்தை துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
திருக்குறள் ஒலிக்கும் புதிய மின்னணு கடிகாரம்- எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
- மகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
- விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி, மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், கலந்து கொண்டனர்.
முன்னதாக திருக்காட்டுப்பள்ளி கடை வீதியில் புதுப்பிக்கப்பட்டு அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலை, திருவள்ளுவ சிலை, தினமும் மணிக்கொருமுறை திருக்குறள் சொல்லும் புதிய கடிகாரம் அமைந்த மணிக்கூண்டு ஆகியவற்றை துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ திறந்து வைத்துமகாத்மா காந்தி சிலைக்கு சந்தன மாலை அணிவித்து அங்கு அமைக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார்.
பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தின விழாவில் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன், தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பிரேமா, பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் மெய்யழகன், செயல் அலுவலர் நெடுஞ்செழியன், துணைத் தலைவர் ரமணி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருக்காட்டுபள்ளி தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில் பூதலூர் சரக வட்டார தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
தலைமையாசிரியர் முருகானந்தம், ஓய்வுபெற்ற தலைமைஆசிரியர் தங்கதிருஞானசம்பந்தம் மற்றும்பலர் கலந்து கொண்டனர்.






