என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வந்தவாசி அரசு மருத்துவமனையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம்
வந்தவாசி:
வந்தவாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு வ ருகிறது. இந்த கட்டிடத்தில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை மையம், ஸ்கேன் செய்யும் அறை, இடம்பெற உள்ளது.
இந்த நிலையில் கட்டிடப் பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திமுக மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணி வேந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆய்வின்போது மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி, மருத்துவர்கள் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story
×
X