என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவி மீது தாக்குதல் ஆடியோவால் சிக்கலில் ராணுவ வீரர்
கண்ணமங்கலம்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரரின் மனைவியிடம், நேற்று மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தி. இவர் படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடை மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்தார்.
மேலும் கடை சம்மந்தமாக ராணுவ வீரர் பிரபாகரின் மனைவி கீர்த்தி என்பவருக்கும் ராமுவுக்கும் பிரச்சனை இருந்தாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராணுவ வீரர் வீடியோ
இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். கோவில் கடை சம்பந்தமாக ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.
சம்பந்த பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி சைலேந்தி ரபாபுவை வலியுறுத்தினார். இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட வீசாரணையில் தெரிந்தது.
இதனை அடுத்து சந்தவாசல் காவல்நிலையத்தில் இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்றார்.
அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரித்தார். இதனை தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் மனைவியிடம் மகளிர் ஆணைய தலைவி விசாரணை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி, நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பிலும் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலர்களை நியமித்துள்ளோம். பாதிக்க பட்ட பெண்ணுக்கு அனைத்து துறை அரசு மருத்துவர்களும் பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை முறையாக விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். தற்போதைக்கு மருத்துவமனையில் மட்டும் பாதுகாப்பு கொடுத்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால் அவர்கள் வீட்டிற்கும் கொடுக்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
இது சம்பந்தமாக நேற்று ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் ராணுவ வீரர் கூறியிருப்பதாவது:-
'ஜீவா அடி ஆட்களை ஏன் அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதில் 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.
இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள்' என்றும் ராணுவ வீரர் பிரபாகரன் வினோத்திடம் தொலை பேசியில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோ வெளியானதால் ராணுவ வீரரின் வழக்கு திசை திரும்பி உள்ளது. அதற்கு ஏற்ப போலீஸ் அதிகாரிகளும் வழக்கை திசை திருப்பி பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதில் கடந்த சில நாட்களாக கீர்த்தி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் பிரபாகரன் நேற்று அடுக்கம்பாறை வந்ததார். அங்கு மனைவி கீர்த்தியை மாலை 5 மணி அளவில் டிர்சார்ஜ் செய்து அவரது கணவர் பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது உடன் இரண்டு பெண் போலீசார் பாதுகாப்புக்காக பைக்கில் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.
கண்ணமங்கலம் காவல் நிலையம் அருகே சென்றபோது, தங்களை விசாரணைக்கு போலீசார் அழைத்து செல்வார்களோ? என பயந்து பிரபாகரன் பைக்கை திருப்பி கண் இமைக்கும் நேரத்தில் வேலூர் நோக்கி தப்பி சென்று விட்டனர். இது குறித்து பெண் போலீசார் சந்தவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் தலைமுறைவான ராணுவ வீரர் பிரபாகரன் மற்றும் அவரது மனைவி கீர்த்தியை தேடி வருகின்றனர்.
விசாரணைக்கு பயந்து போலீஸ் கண்ணில் மண்ணைத் தூவியது போல் தம்பதி தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்