search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்தர்கள் மகா தீபத்தை காண 20 இடங்களில் அகன்ற திரைகள் அமைக்க ஏற்பாடு
    X

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் தீபத் திருவிழாவின் 7-ம் நாளான இன்று காலை விநாயகர் தேரில் பவனி வந்தார். பக்தர்கள் அரோகரா என கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    பக்தர்கள் மகா தீபத்தை காண 20 இடங்களில் அகன்ற திரைகள் அமைக்க ஏற்பாடு

    • கலெக்டர் தகவல்
    • விவரங்களை தெரிந்துகொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் கூறியிருப்பதாவது:-

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திரு விழாவை தரிசிக்க வரும் பக் தர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் சிறப்பாக செய்யப்ப ட்டுள்ளது.

    தீபத்திருவிழா பற்றிய விவரங்களை பக்தர்கள் தெரிந்துகொள்ள வசதி யாக, கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே, இந்த எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறலாம். மேலும், அருணா சலேஸ்வரர் கோவிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள கியூ ஆர் கோடு பயன்படுத்தி பக்தர்கள் நன் கொடைகளை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

    மகாதீபத்திற்கு பிரார்த்தனை நெய்கு டத்திற்கான காணிக்கை கட்டணத்தை, கோவில் ராஜகோபுரம் (கிழக்கு கோபுரம்) அரு கில் உள்ள திட்டிவாயில் பொருட்கள் பாதுகாப்பு அறை மற்றும் திருமஞ்சன கோபுரம் (தெற்குகோபுரம்) நுழைவு வாயில் ஆகிய இடங்களில் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 26-ந் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீப ஏற் றும் நிகழ்வுகளை அகன்ற திரைகளில் பக்தர்கள் கண்டு தரிசிக்க வசதியாக, கோவில் உட்பிரகாரத்தில் 4 இடங்க ளிலும், கோபுரங்களின் வெளியே மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட 20 இடங்களிலும் அகன்ற திரைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம், விழா நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    கோவிலில் நடைபெ றும் முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்களை, https://youtube. com/@arunachaleswarar என்ற இனைய தளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்ப டுகிறது. இந்த வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×