search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    87,842 மாணவர்களுக்கு காலை உணவு
    X

    முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிட்ட காட்சி.

    87,842 மாணவர்களுக்கு காலை உணவு

    • அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார்
    • குழந்தைக்கு உணவுகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 1522 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் படிக்கும் 87,842 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.

    கொளக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

    அப்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு குழந்தைக்கு அமைச்சர் உணவுகளை ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    இதில் மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே. கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்பி, தொழிலாளர் நல மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத் தலைவர் ரமணன், ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், மக்கள் நண்பர்கள் குழு தலைவர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×