search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
    X

    விவசாயிகள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டம்

    • 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிக்கை
    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் இன்று 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தமிழக விவசாயி கள் பாதுகாப்பு சங்கம் சார் பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கீழ்பென் னாத்தூரில் உள்ள மார்க் கெட்கமிட்டி எதிரில்தொடர் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்ட அவை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் ஏழு மலை, மாவட்ட மகளிரணிசெயலாளர் சாந்தா, கீழ்பென்னாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன், கொள்கைபரப்பு செயலாளர் முனிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் நடராஜன் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணிதுணை செயலாளர் ரமேஷ் கலந்து கொண்டுபோராட்டம் குறித் தும், 10 அம்ச கோரிக்கை களை விளக்கியும் பேசினார்.

    இதில் தமிழக அரசு நெல் குவிண் டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மணிலா குவிண்டாலுக்கு ரூ.12 ஆயிரமும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும், உளுந்து குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரமும், மக்காச்சோளம் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரமும், மர வள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.12 ஆயிரமும், பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.50-ம், எருமைப்பாலுக்கு ரூ.75-ம் வழங்க வேண்டும்.

    தமிழக அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை விவசாய பணிகளுக்கு மட் டுமே பயன்படுத்த வேண்டும். மத்திய அரசு மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டபடி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்றும் 4-வது நாளாக விவசாயிகள் கையில் கரும்பு ஏந்தி காத்திருப்பு போரா ட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×