என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்](https://media.maalaimalar.com/h-upload/2023/08/27/1939061-kannamangalamph01.webp)
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு தலைமை ஆசிரியர் கலைபாஸ்கர் தலைமை தாங்கினார். போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதிஅண்ணாமலை, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வரவேற்று பேசினார். இந்த விழாவில் கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, 66 மாணவளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கிப் பேசினார்.
இதேபோல் படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை 77 மாணவ மாணவிகளுக்கு கலசபாக்கம் சரவணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இதில் படவேடு ரேணுகாம்பாள் கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ஆர் வி சேகர், படவேடு ஆசிரியர் சங்க தலைவர் முருகன், உதவி தலைமை ஆசிரியர் சிங்காரகிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.