என் மலர்
உள்ளூர் செய்திகள்
2-வது நாளாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை
- செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது
- கலசபாக்கத்தில் 75.40 மி.மீ மழை பதிவாகியது
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.
இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதில் திருவண்ணாமலையில் 96 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 38.20, போரூரில் 18.80, ஜமுனாமரத்தூரில் 20, கலசபாக்கத்தில் 75.40, தண்டராம்பட்டில் 15.60, ஆரணியில் 18.60, செய்யாறில் 35, வந்தவாசியில் 32, கீழ்பெண்ணாத்தூரில் 33.20, வெம்பாக்கத்தில் 35, சேத்துப்பட்டு 72.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.