என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இந்திய விமானப்படையில் சேர்வதற்கான அரிய வாய்ப்பு
திருவண்ணாமலை:
இந்திய விமானப்படையில் அக்னிவீரவாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜூலை மாதம் 27 முதல் ஆகஸ்டு 17 வரையில் விண்ணப்பிக்கலாம்.
இந்திய விமானப்படையில் அக்னிவீரவாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு 27.06.2003 முதல் 27.12.2006 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ்ஆ ட்டோமொபைல் கம்ப்யூட்டர் சயின்ஸ்) 3-ம் ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
அல்லது Instrumentation Technoloy / Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் மொத்தம் 50% மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும்.
அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக COBSE உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை 10, பிளஸ் 2 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 சென்டி மீட்டர் ஆண்களும் 152 சென்டி மீட்டர் பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.30,000 மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ.250 ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு இணைய வங்கி மூலமாக பணம் செலுத்த வேண்டும். முதற்கட்ட தேர்வாக இணைய வழியில் பொதுஅறிவு மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக பொதுஅறிவு. மற்றும் ஆங்கிலம் சார்ந்த வினாக்கள் தேர்வும், 2-ம் கட்டமாக உடற்தகுதிகள் தேர்வும் நடைபெறும். 2 தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதியில் தேர்வு செய்யப்படுவர்கள்.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பைப் பார்த்து, தேர்வு முறை, தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருவண்ணாமலை கலெக்டர் பா.முருகேஷ். தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்