என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவெண்ணைநல்லூர் அருகே அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை
- திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமத்தில் இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது.
- நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார்.இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே அருகம்பட்டு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு வெளியில் புளியந்தோப்பு உள்ளது. இந்த தோப்பின் நடுவில் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இக்கோவிலில் தினமும் ஆராதனைகள், அபிஷேகங்கள் நடந்து வந்தன. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று இக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் பூசாரி சதாசிவம், நேற்று இரவு கோவிலை மூடிவிட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க பூசாரி வந்தார். அப்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்ப ட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்களிடம் இத்தகவலை கூறினார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ஊர் முக்கியஸ்தர்கள் கோவிலில் உடைக்கப்பட்டிருந்த உண்டி யலை பார்வையிட்டனர். கும்பாபி ஷேகம் நடந்ததில் இருந்தே இக்ேகாவில் உண்டியல் திறக்கப்படவில்லை. இதில் சுமார் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இருக்கலாம் என்றும் ஊருக்கு ஓதுக்குபுறமாக இருந்ததால் இதனை நோட்டம் விட்ட மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்து இருக்கலாம் என்று ஊர் முக்கியஸ்தர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து ஊர் முக்கியஸ்தர் சுபாஷ் (வயது 65) திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.