என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
- ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
- சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்கிய விசேஷ நாட்களில் ஒன்றானது ஆடி கிருத்திகை வைபவம் ஆகும். இந்நாளில் பக்தர்கள் விரதமிருந்து சுவாமியை வழிபடுவது வழக்கமாகும். திருச்செந்தூரில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, நேற்று கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 விஸ்வரூபதரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு காலை 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலையில் 108 மகாதேவர் சன்னதி முன்பு திருவிளக்கு பூஜையும் நடைபெற்று, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானை அம்மனுடன் தங்கத்தேரில் எழுந்தருளி கிரி வீதியுலா வந்தார். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டனர். மேலும் விரதமிருந்த பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தும், பாதயாத்திரையாக வந்தும் சுவாமியை வழிபட்டனர்.