என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
- முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா வருஷாபிசேகத்துடன் தொடங்கியது.
- இன்று இரவு 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது.
உடன்குடி:
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் வருடாந்திர கொடை விழா நேற்று கணபதி ஹோமம், யாகசாலைபூஜை வருஷாபிசேகத்துடன் தொடங்கியது. நேற்று மாலை நாட்டில் வறுமை நீங்கி, செழுமை பெற பாடல்கள்பாடி சிறப்பு திருவிளக்கு வழிபாடு நடந்தது.வில்லிசை, நள்ளிரவு 1மணிக்கு சிறப்பு பூஜையுடன் கும்பம்தெருவீதிபவனிவந்தது.
இன்று காலை 10 மணி மற்றும் இரவு 9 மணிக்கு வில்லிசை, பக்தர்கள் நேமிசங்கள் படைத்தல், நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் கும்பம் தெருவீதி வருதல், இன்று இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. நாளை 2-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சல் பெட்டி ஊர்வலம், காலை 11 மணி, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் வில்லிசை, நண்பகல் 1 மணி, நள்ளிரவு 1 மணி ஆகிய நேரங்களில் சிறப்பு பூஜைகளுடன் கும்பம் தெருவீதிவருதல் மாலை 3மணிக்கு சுவாமிகள் மஞ்சள் நீராடுதல், இரவு 9 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் நடக்கும். 3-ந்தேதி காலை கொடை விழா நிறைவு பூஜையுடன் பக்தர்களுக்கு வரி பிரசாதம் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கொடை விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.