search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.72.29 லட்சம்- கலெக்டர் தகவல்
    X

    தஞ்சையில் படை வீரர் கொடிநாள் தினத்தை கொடி நாள் நிதி வழங்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    தஞ்சை மாவட்டத்திற்கு இந்த ஆண்டு கொடிநாள் நிதி வசூல் இலக்கு ரூ.72.29 லட்சம்- கலெக்டர் தகவல்

    • மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.
    • கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேநீர் விருந்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கூட்டரங்கில் படைவீரர் கொடிநாள் தினத்தை 2022-ஐ முன்னிட்டு கொடி நாள் நிதி வசூல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நாளில் தேசத்தின் குடிமக்களாகிய நாம் அனைவரும் முப்படை வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் வாழ்விற்கு உதவும் வகையில் நிதியினை வாரி வழங்கும் நாள்.

    அடுத்த கொடிநாள் வரை முழு ஆண்டும் கொடிநாள் நலநிதி வசூலிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறாக வசூலிக்கப்படும் தொகை முப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பலவேறு நலத்திட்டங்கள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவிலேயே பல ஆண்டுகளாக கொடிநாள் நிதி வசூல் புரிவதில் தமிழ்நாடு முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. இது படைவீரர்கள் மீது தமிழ்நாட்டு மக்கள் காட்டும் மதிப்பும் மரியாதையையும் அளவிடுகிறது.

    மேலும், கடந்த ஓராண்டில் முன்னாள் படைவீரர் , சார்ந்தோர்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசால் 438 நபர்களுக்கு ரூ.1,33,72,771 நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.

    இவ்விழாவில் ரூ.5,27,100 மதிப்பிலான, கல்வி உதவித் தொகை, திருமண நிதியுதவி, கண் கண்ணாடி மானியம், ஈமச்சடங்கு நிதியுதவி போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் 34 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

    2021 கொடி நாள் ஆண்டில் அரசு இலக்கு ரூ.68,44,000. அதில் ரூ.1,59,53,500 வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 233.10 சதவீதம் ஆகும். கொடிநாள் 2022ஆம் ஆண்டிற்கு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு இலக்கு ரூ.72,29,000 என அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வசூல் தொகையினை விட இந்த ஆண்டு கூடுதலாக வசூல் செய்திட மாவட்ட அலுவலர்களை கேட்டுக்கொள்வதுடன், பொது மக்கள் அதிக அளவில் கொடிநாள் நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×