என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புவனகிரி பகுதியில் ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் சேதம்
- இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் பின்ன லூர், மதுபானைமேடு, நெல்லி கொல்லை. துரிஞ்சி கொல்லை உள்ளிட்ட கிராம விவசாயிகளின் நெல் பயிர்கள் சுமார் 1000 ஏக்கர் அழுகி உள்ளது. இதற்கு சூடாமணி ஏரியின் மழை நீர் வெளியேற வழி இன்றி நிற்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் -விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இந்த பகுதியில் வடிகால் அமைக்கப்படாத தால் நெல் பயிர்கள் அழுகி உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க வில்லை எனவும் லேடன்மூ லம் கணக்கெடுப்பதால் எங்களால் எதுவும் செய்ய முடியாது என காப்பீடு திட்ட அலுவலர்களும், வேளாண் துறை அலுவலர்க ளும் தெரிவிப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர்.அழுகிய நிலையில் உள்ள நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.