search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆயிரக்கணக்கான மாடுகள் குவிந்தன -போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கி சென்றனர்
    X

    சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ள மாடுகள்.

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையம் சந்தையில் ஆயிரக்கணக்கான மாடுகள் குவிந்தன -போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கி சென்றனர்

    • மேலப்பாளையத்தில் திங்கட்கிழமை தோறும் மாட்டு சந்தை நடந்து வருகிறது.
    • ஒவ்வொரு வாரமும் மேலப்பாளையம் சந்தையில் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனை நடைபெறும்.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இங்கு ஆடுகளுடன், மாடு மற்றும் கருவாடு விற்பனை நடந்து வருகிறது. அந்த வகையில் வாரந்தோறும் தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தையும், செவ்வாய் கிழமை தோறும் ஆட்டுச்சந்தையும் நடந்து வருகிறது.

    மாடுகளுடன் குவிந்த வியாபாரிகள்

    வழக்கமாக ஒவ்வொரு வாரமும் சுமார் ரூ. 2 கோடி வரை விற்பனையாகும். ரம்ஜான், பக்ரீத், தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், திருவிழா நாட்களிலும் விற்பனை மேலும் அதிகரித்து காணப்படும்.

    இந்நிலையில் இன்னும் 4 நாட்களில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இன்று மேலப்பாளையம் மாட்டு சந்தைக்கு ஏராளமான வாகனங்களில் ஆயிரக்க ணக்கான மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாடுகள் கொண்டு வரப்பட்டது. அவைகள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இதற்காக இன்று 100-க்கணக்கான சில்லறை வியாபாரிகள் சந்தையில் திரண்டனர். மேலும் பொதுமக்களும் அதிகளவில் வந்திருந்தனர். இதனால் மேலப்பாளையம் சந்தை இன்று களைகட்டி காணப்பட்டது.

    Next Story
    ×