என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி போலீஸ் நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதம்
- 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம்.
- 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
கோவை
கோவை மாவட்டம் ெபாள்ளாச்சி குமரன் நகரில் பா.ஜ.க., இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளின் வாகனங்கள் கடந்த 22-ந் தேதி சேதப்படுத்தப்பட்டது. மேலும் அங்கு பெட்ரோல் குண்டும் வீசப்பட்டது. இதில் தொடர்புடைய சிலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது.
ஆய்வாளர் அவர்களுக்கு வணக்கம், நாங்கள் அமைதியான வழியில் சென்று கொண்டு இருக்கிறோம். போலீசார் எங்களுக்கு எதிரியல்ல. நாங்கள் பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டோ அல்லது நாட்டு வெடிகுண்டோ வீச உள்ளோம். போலீசார் சட்டம் ஒழுங்கை பாதுகாத்து கொள்ளவும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு ஒரு அமைப்பின் பெயரும் அதில் எழுதப்பட்டு இருந்தது.
இந்த மிரட்டல் கடிதத்தை யார் அனுப்பியது என்ற விவரங்கள் எதுவும் இல்லாமல் போலீஸ் நிலையத்துக்கு தபாலில் வந்தது. இந்த மிரட்டல் கடிதத்தை கைப்பற்றிய போலீசார் அதனை யார் அனுப்பியது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாகனங்களை சேதப்படுத்திய வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.