search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டிவனம் வ.உ.சி. திடலில்  பட்டாசு கடைகள்  அமைக்க கூடாது  சப்-கலெக்டரிடம் மனு
    X

    சப்-கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்ட காட்சி.

    திண்டிவனம் வ.உ.சி. திடலில் பட்டாசு கடைகள் அமைக்க கூடாது சப்-கலெக்டரிடம் மனு

    • தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
    • வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் சப்-கலெக்டர் அமித்யிடம் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மனு அளித்தார். மனுவில் வருகின்ற தீபாவளி அன்று தற்காலிக பட்டாசு கடை வ.உ.சி திடலில் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. வ .உ. சி. திடலில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த நகராட்சி நிர்வாகத்தால் ஒதுக்கப்பட்ட இடம் ஆகும். வ .உ. சி. திடலை சுற்றி சுமார் 50-க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடை அமைய உள்ளது. பின்புறம் எண்ணை குேடான்கள் உள்ளது.

    இந்த இடத்தில் பட்டாசு கடை அமைக்க பொருத்தமான இடம் இல்லை. இந்த இடம் அதிகமாக போக்குவரத்து ஏற்படும் இடமாகும்.

    திண்டிவனத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பஸ் அனைத்தும் இந்த வழியாக தான் செல்லும் பயணிகள் அதிகளவில் நின்று செல்லும் இடமாக இது உள்ளது. வ.உ.சி. திடலில் பின்புறம் 3 ஹோட்டல்கள் உள்ளன திடீரென ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

    எனவே இந்த இடத்தில் தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அனுமதி தரக் கூடாது என இந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×